January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் கிரிக்கெட்: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 33 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள போதும் ஹைதராபாத்-டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.