January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தாலிபான்கள் தடை விதிப்பு!

பெண்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதாலும், போட்டியின்போது ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஐபிஎல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பகுதி  போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

இம்முறை போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருவதுடன், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் ஐபிஎல் இல் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்குதாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வரும் ஊடகவியலாளருமான பவாத் அமான் இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.