July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையை வீழ்த்திய சென்னைக்கு புள்ளிப் பட்டியலில் முதலிடம்!

Photo: Twitter/ Chennai Super Kings

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 30 ஆவது லீக் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன்படி, 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென்னை அணி, நடப்பு சீசனில் ஆறாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

அத்துடன், இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்திலிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றி, 4 இல் தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளது.