November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து!

Photo: PCB Twitter

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையேயான ஒருநாள், டி-20 தொடர், பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று பகலிரவுப் போட்டியாக நடைபெற இருந்தது.

ஆனாரல், நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அத்தோடு, சுற்றுப்பயணத்தையும் முடித்துக்கொண்டு நியூசிலாந்து அணி உடனடியாக நாடு திரும்ப உள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட ஒயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு அரசின் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் பாகிஸ்தானில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற சூழலில் எங்கள் வீரர்களின் உயிர் முக்கியமானதாக கருதி, இந்தச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு பேரிழப்பாக இருக்கும். ஆனால் வீரர்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது கடந்த 2009 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகள் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.