Photo: Virat kohli facebook
டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பின்னர், டி-20 போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.
டி-20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே விராட் கோஹ்லியின் தலைமைத்துவம் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தனது பதவி விலகல் குறித்து விராட் கோஹ்லி தற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ”டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் டி-.20 தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளேன். துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கோஹ்லியின் இந்த திடீர் முடிவு இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021