இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டி-20 போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை 3 க்கு 0 என கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் பெரேரா 39 ஓட்டங்கள் எடுக்க, சாமிக்க கருணாரத்ன 24 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு சார்பில் ஜொர்ன் பொர்டியுன் மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 14.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் மோசமான தோல்வியை தழுவிய இரண்டாவது சந்தர்ப்பமாக இந்த தோல்வி அமைந்தது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் குயின்டன் டி கொக் 59 ஓட்டங்களையும், ரீசா ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவாகினார்.