இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பிறகு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மெய்வல்லுனர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மெய்வல்லுனர் ஆலோசகராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிபுரிந்த சுசந்திகா ஜயசிங்கவுக்கு தற்போது 47 வயதாகிறது.
2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டரில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.