Photo: Srilanka Criket
தசுன் ஷானக தலைமையில் ஐசிசி டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாக பந்துவீச்சில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷன முதல் முறையாக குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல, தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் கடந்த 3 இன்னிங்ஸ்களில் ஓட்டம் பெறத் தவறிய பானுக்க ராஜபக்ஷ குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அழைப்பு டி-20 லீக்கில் ஆரம்ப வீரராக பிரகாசித்த அனுபவ வீரர் தினேஷ் சந்திமாலும் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஏனைய அனைவரும் 30 க்கும் குறைவான சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களாவர்.
ஆனால், அவர்கள் அனைவரும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் ஆறு துடுப்பாட்ட வீரர்கள், 5 சகலதுறை வீரர்களும், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களும், 2 சுழல்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உதவித் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா (வி.கா.), தினேஷ் சந்திமால் (வி.கா.), பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க, ப்ரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, நுவன் ப்ரதீப்
மேலதிக வீரர்கள்: புலின தரங்க, லஹிரு குமார, அகில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ