July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பாதிப்பு: இந்தியா – இங்கிலாந்து 5 ஆவது டெஸ்ட் போட்டி ரத்து!

Photo: Twitter/BCCI 

இந்திய அணியைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் ஆரம்பமாக இருந்தது.

ஆனால். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட இந்திய அணியின் மூன்று பயிற்சியாளர்களுக்கும், அதேபோல் உடற்கூற்று மருத்துவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தாலும், கொரேனா வைரஸ் அச்சம் காரணமாக இரு அணி வீரர்களும் விளையாட தயங்குவதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், இன்று ஆரம்பமாகவிருந்த போட்டியை அடுத்த ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை, பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் செப்டம்பர் 19 ஆம் திகதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளதால் இங்கிலாந்து சபையின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

எனவே, இந்த தொடரில் இருந்து விலகி கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.