January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

தென்னாபிரிக்கா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டி நிலையில் சீரற்ற காலநிலையால் 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைடுத்து போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கிணங்க முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு D/L முறைப்படி 265 என்ற இலக்கு நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.