July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச டி-20 லீக் தொடரை நடத்த திட்டம்

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறுவதற்கு முன் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்குபற்றலுடன் பெண்களுக்கான டி-20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இந்த டி-20 லீக்கை  2022 பெண்களுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இந்த லீக் தொடருக்கு ‘Lanka Women’s Super League T20’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் ஒரு அணியில் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரானது தம்புள்ளை அல்லது பல்லேகலேவில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

இதனிடையே, குறித்த டி-20 லீக்கை நடத்துவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை அணி உரிமையாளர்கள், நிறுவனங்கள், விளையாட்டு சந்தைப்படுத்தல், மேலாண்மை நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி பிற்பகல் 01.00 மணியுடன் நிறைவடையும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.