January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

Photo: Sri Lanka Cricket

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (02) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும், சரித் அசலங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, 301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 286 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

அந்த அணிக்காக எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 96 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன்மூலம் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக சதமடித்த அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாகினார்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.