May 23, 2025 20:38:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமனம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பதவிக்காலம் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இதனிடையே, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளின் பயிற்சியாளராக அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் அவிஷ்க குணவர்தன கடமையாற்றியிருந்தார்.

இதேவேளை, இலங்கை 19  வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முகாமையாளராக மஹிந்த ஹலங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.