November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ பாராலிம்பிக்: பெண்களுக்கான 100 மீட்டரில் குமுதுவுக்கு கடைசி இடம்

Photo: Danushka Aravinda

டோக்கியோ பாராலிம்பிக் பெண்களுக்கான T -47 பிரிவு 100 மீட்டர் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை குமுது பிரியங்கா எட்டாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

டோக்கியோ பாராலிம்பிக்கின் ஏழாவது நாளான இன்று (31) காலை பெண்களுக்கான T-47 பிரிவு 100 மீட்டர் தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றது.

இதில் இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு வீராங்கனையான குமுது பிரியங்கா களமிறங்கினார்.

குமுது பிரியங்கா பங்குகொண்ட முதலாவது தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா, வெனிசுவேலா, தென்னாபிரிக்கா, சீனா, செக் குடியரசு, தாய்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்.

எனினும், குறித்த போட்டியை 13.31 செக்கன்களில் நிறைவு செய்த குமுது பிரியங்கா, எட்டாவது இடத்தை பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

இதனிடையே, குமுது பிரியங்கா பங்குகொண்ட முதலாவது தகுதிகாண் போட்டியில் வெனிசுவேலா நாட்டு வீராங்கனை லிஸ்பெலி வெரா போட்டியை 12.14 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தையும், அமெரிக்காவின் டேஜா யங் (12.26 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

எவ்வாறாயினும், செப்டெம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான நீளம் பாய்தலில் அவர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.