நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 12 வருடங்களின் பின்னர் மீண்டும் மென்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துகொண்டுள்ளார்.
இத்தாலியின் ஜுவன்டஸை விட்டு வெளியேறுவதாக ரொனால்டோ அறிவித்ததைத் தொடர்ந்து, மென்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துகொண்டுள்ளார்.
ரொனால்டோ புதிய கழகத்தை தேடி கொண்டிருக்கும் போது மன்செஸ்டர் சிட்டி கழகம் அவரை வாங்க முயற்சித்தது. இரண்டு நாட்கள் சிட்டி கழகம் ரொனால்டோவவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்த போதிலும், யுனைடட் கழகத்தின் முன்னாள் சக வீரர்களும், ரொனால்டோவினால் தந்தையாக மதிக்கப்படும் முகாமையாளர் என கூறப்படும் யுனைடட் கழகத்தின் முன்னாள் முகாமையாளர் சேர் அலெக்ஸ் பெர்குசன் ஆகியோர் ரொனால்டோவை யுனைடட்டில் இணைந்துகொள்ளுமாறு கேட்டதிற்கு இணங்க, ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடட் கழகத்தின் இணைய சம்மதித்தாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
36 வயதான ரொனால்டோவின் வருகையை மென்செஸ்டர் யுனைடட் அணி ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் கிறிஸ்டியானோ மென்செஸ்டர் யுனைடட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி, 118 கோல்களை அடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடட் அணியுடன் இரண்டு வருட ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளார்.
தற்போது 25 மில்லியன் பவுண்களுக்கு ரொனால்டோவை வாங்கியிருக்கும் மன்செஸ்டர் யுனைடட், அவரை எதிர்வரும் போட்டிகளில் களமிறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தற்போது இருக்கும் யுனைடட் கழகத்தின் முகாமையாளருடன் ஒன்றாக விளையாடிய ரொனால்டோ தற்போது அவரின் அணியில் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.