November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க மைனர் லீக் டி-20 தொடரில் விளையாடும் ரணதுங்க

Photo: Hollywood Master Blasters Twitter

இலங்கைக்கு 1996 இல் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க, அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற மைனர் லீக் கிரிக்கெட் தொடரில் ஹாலிவுட் மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் அணியுடன் இணைந்து எடுத்த படங்கள் வெளியாகியுள்ளது.

அர்ஜுன ரணதுங்கவின் மகன் தியான் ரணதுங்க அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற மைனர் லீக் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரில் ஹாலிவுட் மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்

இதனிடையே, தியான் ரணதுங்கவுடன் இலங்கையைச் சேர்ந்த சில வீரர்கள் இம்முறை மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, தியான் ரணதுங்க, ஷெஹான் பெர்னாண்டோ (ஹாலிவுட் மாஸ்டர் பிளாஸ்டர்ஸ்), ஷெஹான் ஜயசூரிய (சிலிக்கன் வெலி ஸ்ட்ரைக்கர்ஸ்), ரவிந்து குணசேகர (நியூ ஜெர்சி சமர்செட் காவலியர்ஸ்), இசுரு குருவிட்டகே, ரோய் சில்வா (லாடர்டேல் லயன்ஸ்), அமில அபோன்சோ (அட்லாண்டா பையர்) கயான் பெர்னாண்டோ, பீட்டர் விட்டாச்சி (சோகல் லெஷிங்ஸ்) ஆகிய இலங்கை வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலுமிருந்து 80 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஆறு வாரங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.