January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல் 2021: இலங்கையின் ஹசரங்க, சமீர ரோயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம்

விராத் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தடைப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.

உலகின் இருபது 20 பந்துவீச்சாளர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வையைப் பெற்றிருந்தார்.

இறுதியாக நடைபெற்ற மூன்று தொடர்களிலும் சிறப்பாக பந்து வீசிய துஷ்மந்த சமீரவுக்கும் ஐபிஎல் வாய்ப்பு கிடைத்துள்ளது.