January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன் இலங்கை அணி ஓமான் பயணம்

ஐசிசியின் டி-20 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பு இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபரில் ஓமான் செல்லவுள்ளது.

டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாவதற்கு முன் தகுதிகாண் போட்டிகள் ஓமானில் நடைபெறவுள்ளன.

இதனிடையே, டி-20 உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணி, ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஓமானின் வானிலை மற்றும் விளையாட்டு நிலைமைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தைப் போன்றது.

டி-20 உலகக் கிண்ணத்க்குத் தயாராவதற்கு இலங்கை அணிக்கு அது சிறந்த தளத்தை வழங்கும் என நம்ப்பப்படுகிறது.

இதேவேளை, டைம்ஸ் ஆப் ஓமான் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல் படி, இலங்கை மற்றும் ஓமான் அணிகள் மோதும் இரண்டு டி-20 போட்டிகளும் ஒக்டோபர் 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் அமரேட்டில் உள்ள ஓசி மைதானத்தில் நடைபெறும்.

இந்த நிலையில், இலங்கை அணி ஓமானுடன் விளையாடுவது தொடர்பில் அந்த அணியின் பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் கருத்து தெரிவிக்கையில்,

டி-20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் போது ஓமானுக்கு எதிராக இலங்கை இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடும். அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் வழியில் ஓமானுக்கு வர முடிவு செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இடம்பெறும் தகுதிகாண் போட்டிகளில் A குழுவில் இலங்கை ,அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகியனவும் ஓமான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியன B குழுவில் இடம்பெற்றுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.