November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் இலங்கையிலிருந்து 7 பேர் பங்கேற்பு

Photo: Ceylon Athletics

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள் இன்று (15) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்ட குறித்த தொடர் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கென்யாவில் நடைபெறவுள்ளது.

இம்முறை போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து ஏழு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் மூன்று வீரர்களும், நான்கு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவரான ஜகத் ஜனனசிறி இலங்கை அணியின் முகாமையாளராக செயல்படவுள்ளதுடன், இலங்கை அணியின் பயிற்சியாளர்களாக உமங்க சுரேந்திர, தனுஷ்க முணசிங்க ஆகிய இருவரும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்கள் விபரம்

இசுரு கௌஷல்ய – ஆண்களுக்கான 400 மீட்டர், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்

ரவிந்து டில்ஷான் பண்டார –  4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்

சிதும் ஜயசுந்தர – 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்

மெதானி ஜயமான்ன – பெண்களுக்கான 100, 200 மீட்டர்

ஷானிக்கா லக்ஷானி – பெண்களுக்கான 800 மீட்டர்

தருஷி கருணாரட்ன – பெண்களுக்கான 800 மீட்டர், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்

சயுரி லக்ஷிமா – 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்