May 25, 2025 21:24:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று ஜமைக்கா வீராங்கனை சாதனை

Photo: Tokyo Olympic Twitter

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று (03)நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தோம்சன் ஹேரா தங்கப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியை 21.53 செக்கன்களில் நிறைவுசெய்த அவர் ஒலிம்பிக் அரங்கில் புதிய வரலாறு படைத்தார்.

ஒலிம்பிக் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற உலகின் முதலாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் அவர் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியை 21.81 செக்கன்களில் நிறைவு செய்த 18 வயதான நமீபியா நாட்டு வீராங்கனை கிறிஸ்டின் எம்போமா வெள்ளிப் பதக்கத்தை வென்று, 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்ககான 200 மீட்டரில் புதிய சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் கெப்பி தோமஸ், போட்டியை 21.87 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.