இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் குதிரையேற்றம் போட்டியில் கலந்துகொண்ட மெடில்டா கார்ல்ஸன், முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
குதிரையேற்றம் போட்டியில் சொபின் எனும் குதிரையுடன் கலந்துகொண்ட மெடில்டா, முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இவரது குதிரை சொபின் போட்டியின் போது, இரண்டு தடவைகள் தடை தாண்ட மறுத்ததால், மெடில்டா போட்டி விதிமுறைகளின்படி வெளியேறினார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மெடில்டா, சுவீடனில் வசித்து வருகிறார்.
மெடில்டா கார்ல்ஸனின் குதிரை 1.4 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
மெடில்டா இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றெடுப்பார் என நம்பப்பட்ட நிலையில், தோல்வியடைந்துள்ளார்.