January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை –தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியானது

Photo: Sri Lanka Cricket

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி நேற்று (02) நடைபெற்றிருந்ததுடன், குறித்த போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-1 என டி-20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த நிலையில், இலங்கை அணிக்கான அடுத்த தொடராக அமையவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஐ.சி.சி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகளுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடரானது ரசிகர்களின்றி நடைபெறவுள்ளது.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் அடங்கிய இந்த தொடரானது, எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதலில் ஆரம்பமாகும் ஒருநாள் தொடர் செப்டம்பர் 7 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளதுடன், டி-20 தொடர் செப்டம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, 14 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது.

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போட்டி அட்டவணை

முதலாவது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 2

2 ஆவது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 4

3 ஆவது ஒருநாள் போட்டி –செப்டம்பர் 7

1 ஆவது டி-20 போட்டி –செப்டம்பர் 10

2 ஆவது டி-20 போட்டி –செப்டம்பர் 12

3 ஆவது டி-20 போட்டி –செப்டம்பர் 14