
Photo: Rajasthan Royals Twitter
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரெட் லீக் தொடரில், லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷேன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01) லண்டன் ஸ்பிரிட்ஸ் அணி, சௌதெர்ன் பிரேவ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தது.
இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன் ஷேன் வோர்ன் சுகயீனமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஷேன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த அணியின் எந்த வீரருக்கும் கொவிட்-19 தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதற்கு முன்னர், ட்ரெண்ட் ரொக்கட்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அண்டி பிளவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அந்த அணியின் கடைசி மூன்று போட்டிகளிலும் அவர் அணியுடன் இணைந்திருக்கவில்லை.