இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மன ஆரோக்கியத்தையும் உள அமைதியையும் பேணுவதற்காகவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ள நிலையிலேயே, பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.
உள அமைதியை எதிர்பார்த்து விளையாட்டுக்களில் இருந்து ஓய்வை அறிவித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் தற்போது பென் ஸ்டோக்ஸும் இணைந்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் 2019 ஆம் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த வீரராவார்.