January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது டி-20; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

photo: srilankacricket.lk

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 40 ஓட்டங்களையும்,தேவ்தத் படிக்கல் 29 ஓட்டங்களையும் அதிகப் படியாக பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் மினோத் பானுக 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.