கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.அதற்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி, மொத்தம் 31 போட்டிகள் 27 நாட்களில் நடைபெறும்.அக்டோபர் 15 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
செப்டம்பர் 19 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போதும் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தத்தில், 13 போட்டிகள் துபாயிலும், 10 ஷார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் (Qualifier) துபாயில் அக்டோபர் 10 ஆம் திகதியும், எலிமினேட்டர் இரண்டாவது (Qualifier) அக்டோபர் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இதனையடுத்து ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி 8 போட்டிகள் விளையாடி, 6 போட்டிகளை வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும், 7 போட்டிகளை சந்தித்துள்ள சென்னை 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.