Photos: Facebook/ National Olympic Committee of Sri Lanka
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் முதலாம் நாள் 11 தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
ஒலிம்பிக் பதக்க அட்டவணையில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களுடன் சீனா முன்னணியில் இருக்கிறது.
இத்தாலி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றி மூன்று போட்டிகள் இன்று நடைபெற்றுள்ளன.
பெட்மிண்டன் போட்டியில் நிலூக கருணாரத்ன பலத்த போட்டிக்கு மத்தியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பெண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கையின் அனீகா கபூர் முதல் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்றாலும், அரை இறுதி போட்டிக்கு தெரிவாக முடியவில்லை.
வாயு துப்பாக்கி சுடும் போட்டியில் 611 புள்ளிகளுடன் இலங்கையின் தெஹானி எகொடவெல 49 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பெண்களுக்கான கால்பந்து போட்டியில் பிரிட்டன் பெண்கள் அணியும், ஹொக்கி போட்டியில் பிரிட்டன் ஆண்கள் அணியும் வெற்றிபெற்றுள்ளன.
18 பதக்கங்களுக்கான நிகழ்வுகளுடன் நாளை ஒலிம்பிக் இரண்டாவது நாள் தொடங்கவுள்ளது.