July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

32 ஆவது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன.

உலகலாவிய ரீதியில் பரவிய கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த வருடத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்த 32 ஆவது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை டோக்கியோ நகரில் இந்தப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. கலை மற்றும் சாகச நிகழ்வுகளுடன் போட்டிகள் ஆரம்பமாகும்.

ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் தேவையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஜப்பான் அரசும் நடவடிக்கையெடுத்துள்ளது.

இதற்கு வசதியான வகையில் தற்போது ஜப்பான் முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய போட்டிகளை பூட்டிய அரங்கில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை கால்பந்து, ஹொக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர்.