January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் தடகள கிராமத்தில் முதல் முறையாக இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜப்பானில் இம்மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் தடவையாக போட்டிகளில் கலந்து கொண்டுள்ள 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பல நாடுகளினதும் வீரர்கள் டோக்கியோ பயணமாகியுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தடகள கிராமத்தில் இரு வீரர்களுக்கு சனிக்கிழமையன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரே அணியை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அந்த அணியின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு தடகள வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, ஒலிம்பிக் தடகள கிராமத்தில் மொத்தமாக 15 புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நேக்கில் டோக்கியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், டோக்கியோவின் பொது மக்களிடையே நோய்த் தொற்று வீதங்கள் அதிகரித்து வருவதாகவும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அங்கு 1,000 புதிய கொவிற் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.