October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா

(Photo: BCCI/IPL)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற்றது. சுப்மன் கில் 36 ஓட்டங்களையும், அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

164 ஓட்டங்களை நோக்கிக் களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி சார்பாக அணித்தலைவர் டேவிட் வோனர் 47 ஓட்டங்களையும், ஜொனி பெயார்ஸ்டோ 36 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகப் பெற்ற நிலையில்,சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.இதனையடுத்து வெற்றியை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் ஓவரில் சன்ரைசஸ் அணியை வெறும் 2 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய கொல்கத்தா அணி, 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 5 வெற்றிகளுடன் நான்காமிடத்திலும், ஹைதராபாத் அணி 3 வெற்றிகளுடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன.