இலங்கையின் ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை ஜூடோ (Judo) சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் (Scrabble) சம்மேளனம், இலங்கை சர்பிங் (Surfing) சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு (Jiu-jitsu) சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மேற்குறிப்பிட்ட ஐந்து விளையாட்டு சம்மேளனங்களுக்கு ஜூலை முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.