July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இலங்கை

விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவுடன் இலங்கை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மெய்வல்லுனர், நீச்சல், ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம், வாள் சண்டை, கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக இரு நாடுகளுக்கும் இடையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவோரின் விபரங்கள் உயர்கல்வி நிறுவனங்கள், விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கட்டமைப்புகளுக்கு இடையே பகிரப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.