
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் ஆர்சனல் மற்றும் மென்செஸ்டர் சிட்டி அணிகள் ஒரு போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டி மென்செஸ்டர் சிட்டி கழக மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் முதல் பாதியில் 23 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணித்தலைவரான ரஹீம் ஸ்டேர்லிங் முதல் கோலை அணிக்கு ஈட்டிக்கொடுத்தார்.
அதற்கமைய 1-0 என மென்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை வகிக்க முதல் பாதி ஆட்டம் முடிந்தது. இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களுமே கோலடிக்க கடும் பிரயத்தனம் எடுத்தனர்.
ஆனால், ஒருவராலும் கோலடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி ஆட்டம் கோலின்றியே முடிய 1-0 எனும் கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.
பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தின் புள்ளிகள் பட்டியலில் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் மென்செஸ்டர் சிட்டி அணி 7 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாமிடத்தில் உள்ளது.
இதேவேளை, லிவர்பூல் மற்றும் எவர்டன் கழக அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
எவர்டன் கழக அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது.
லிவர்பூல் கழக அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும் அஸ்டன் விலா கழக அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை அடைந்து மூன்றாமிடத்திலும் உள்ளன.