January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரின் திகதிகளில் மாற்றம்

photo:bcci

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி 20 போட்டி தொடர்களின் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு நாள் போட்டி தொடரை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டியை 21 ஆம் திகதிக்கும், இறுதி போட்டியை 24 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டி20 போட்டிகள் இம்மாதம் 26, 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.