January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி

(Photo: BCCI/IPL)

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் ஏபி டிவிலியர்ஷின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றது.

ரொபின் உத்தப்பா 22 பந்துகளில் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 57 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

கிறிஸ் மொறிஸ் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சகால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பாக டெவ்டட் படிக்கால் 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஏபி டிவிலியர்ஸ் 22 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதிசெய்தார். பெங்களுர் அணி 19.4 ஓவர்களில் வெற்றியை பெற்றது.