
photo: Facebook/ Usain Bolt
தடகள வீரர் உசைன் போல்ட், தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்த செய்தியை நேற்று தந்தையர் தினத்தில் அறிவித்துள்ளார்.
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள செய்தியை உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட் தம்பதிகள் தமது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
ஆண் குழந்தைகள் இரண்டுக்கும் தண்டர் போல்ட் மற்றும் சென்ட் லியோ போல்ட் என பெயர் வைத்துள்ளனர்.
குழந்தைகள் பிறந்த சரியான தினத்தை அறிவிக்காத போல்ட், மனைவி, மகள் ஒலிம்பியா மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் படமொன்றைப் பதிவேற்றியுள்ளார்.
“குடும்பத்தின் தூணாகவும், எமது சிறிய குழந்தைகளுக்கு மிகப் பெரிய தந்தையாகவும் போல்ட் இருக்கிறார்” என்று மனைவி காசி பென்னட் குறிப்பிட்டுள்ளார்.