உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற ஏற்படாகியுள்ளது.
இத்தொடரில் தென் அமெரிக்காவிலிருந்து பங்கேற்கும் அணிகளைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பிரேஸிலின் சாவோ பாலோவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பிரேஸில் மற்றும் பெரு அணிகள் விளையாடின.
முதல் பாதி ஆரம்பமாகி 5ஆவது நிமிடத்தில் பெரு அணிவீரராக கெரில்லோ முதல் கோலைப் போட்டார். 28 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் நெய்மர் கோலடிக்க முதல் பாதி 1-1 என சமநிலை அடைந்தது.
இரண்டாம் பாதியில் மற்றுமொரு பெரு அணி வீரரான டபியா 59 ஆவது நிமிடத்தில் கோல் போட அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
என்றாலும் 64 ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் ரிச்சட்ஸ்லிசன் கோல் எண்ணிக்கை சமனானது.
83 ஆவது நிமிடத்தில் மீண்டும் அசத்திய நெய்மர் கோலொன்றைப் போட பிரேஸில் அணி மூன்றாவது கோலை எட்டியது. 90 நிமிடங்கள் முடிந்து உபாதைக்கான மேலதிக நேரத்தில் நெய்மர் ஹெட்ரிக் கோலைப் பூர்த்திசெய்தார்.
அதன்படி 4-2 எனும் கோல் கணக்கில் பிரேஸில் அணி வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது.
இதேவேளை, பொலிவியாவை 2-1 என ஆர்ஜென்டினாவும், உருகுவேவை 4-2 என ஈக்வடோரும் வெற்றி கொண்டன.