January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகும் வீரர்கள்

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் வீரர்கள் அபாரமாக செயற்பட்டு பிரகாசித்து வரும் நிலையில் மறுபுறம் சில வீரர்கள் விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதையே அதற்கு காரணமாகும். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இஷாந் சர்மா டெல்லி கெபிடெல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். என்றாலும் அவரால் ஓர் ஆட்டத்தில் மாத்திரமே இந்தமுறை விளையாட முடிந்தது.

உபாதையால் அவதிப்பட்ட அவர் கடந்த ஆட்டங்கள் பலவற்றை இழந்ததுடன் முழுத்தொடரிலிருந்துமே விலகியுள்ளார். இஷாந் சர்மாவுக்கு விலாஎலும்பில் உபாதை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரிஷப் பாண்ட், ஷிம்ரோன் எட்மயர் ஆகியோரும் உபாதைக்குள்ளாகி விளையாடும் உடல் தகுதியை இழந்துள்ளனர். அவர்களால் அடுத்த சில ஆட்டங்களில் பங்கேற்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இவர்கள் இருவரும் இல்லாமல் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.