July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன நியமனம்!

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய லங்கா டி சில்வாவின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையில், ஹஷான் திலகரட்னவை பயிற்றுவிப்பாளராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ள்து.

அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடிய இவர், 2018 முதல் 2020 வரை இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இதில் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 10 வது இடத்தை பிடித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி இன் மகளிர் பெண்களுக்கான டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் இலங்கை பெண்கள் அணி எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

எனவே, அடுத்த வருடம் நடைபெவுவள்ள மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் ஆகியவற்றுக்கு இலங்கை பெண்கள் அணியை தயார்படுத்துவதே ஹஷான் திலகரட்னவின் முதலாவது பணியாக அமையவுள்ளது.

இலங்கை சார்பாக 83 டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள், 20 அரைச் சதங்களுடன் மொத்தமாக 4,545 ஓட்டங்களையும், 200 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், 13 அரைச் சதங்களுடன் 3,789 ஓட்டங்களையும் ஹஷான் திலகரட்ன பெற்றிருந்தார்.