Photo: Facebook/Cristiano Ronaldo
உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரும், போர்த்துக்கல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் யுவன்டஸ் அணிக்காக விளையாடும் ரொனால்டோவுக்கு தற்போது 35 வயதாகின்றது.
பிரான்சிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் பின்னரே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
நோய் அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டாலும் ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதாக போர்த்துக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் சுவீடனுக்கு எதிரான போட்டியிலிருந்து ரொனால்டோ நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
100 சர்வதேச கோல்களைப் போட்ட முதல் ஐரோப்பிய வீரராக கடந்த மாதத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைல்கல் சாதனையை எட்டியிருந்தார்.
ரொனால்டோ திங்கட்கிழமை இரவு அணி வீரர்களுடன் இரவு உணவின் போது நிழற்படம் எடுத்துக்கொண்டதுடன் அந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் உலாவருவதும் குறிப்பிடத்தக்கது.