January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களூருக்கு எதிராக இன்று களமிறங்குகிறார் கெயில்!

Photo: Facebook/Chris Gayle

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் இன்று களமிறங்கத் தயாராகியுள்ளதாக ஐ.பி.எல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயிற்று உபாதை மற்றும் உடல் நலக்குறைவால் பஞ்சாப் அணி பங்கேற்ற 7 ஆட்டங்களிலும் கிறிஸ் கெயில் விளையாடவில்லை.

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கெயில் எப்போது களமிறங்குவார் என ஒரு பட்டாளமே காத்திருக்க 15 ஆம் திகதி நடைபெறும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆட்டத்தை சிறப்பாக எதிர்கொள்வதற்காக கிறிஸ் கெயில் இந்நாட்களில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் சதமடித்த வீரர் என்ற சிறப்பும் கிறிஸ் கெயிலுக்கு உள்ளது.

பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளை மாத்திரம் பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.