January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சு பயிற்சியாளராக சஜீவ வீரகோன் நியமனம்!

பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சுப் பயிற்சியாளராக சஜீவ வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷிற்கு புறப்பட்டுச் சென்ற குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஒருநாள் சுப்பர் லீக்கினுடைய ஒரு அங்கமாக அமையும் இந்தத் தொடரில்  முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான சஜீவ வீரகோன் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சஜீவ வீரகோனின் நியமனம் தற்காலிகமானது எனக் குறிப்பிடப்படுகின்ற போதும், அதிக இளம் வீரர்களை கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு அவரது அனுபவம் பெரிதாக உதவும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் உடன் இணைந்து தற்போது பணிபுரியப் போகும் சஜீவ வீரகோன், இலங்கை அணியினை 2 ஒருநாள் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருப்பதோடு, மொத்தமாக (List A) 157 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி 207 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார்.

அதேபோன்று அவர் முதல்தரப் போட்டிகளில் 816 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.