பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெய்னின் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதற்கான நான்காம் சுற்றுப் போட்டியில் அவர் அமெரிக்காவின் செபஸ்தியன் கொர்டாவை வீழ்த்தினார்.
பிரான்ஸில் பரிஸிலுள்ள ரோலண்ட் காரோஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான நடாலுடன் 20 வயது இளம் வீரரான செபஸ்தியன் கொர்டா பலப்பரீட்சை நடத்தினார்.
போட்டியில் 6-1, 6-1, 6-2 என்ற கணக்கில் 34 வயதுடைய நடால் மிக இலகுவாக வெற்றியீட்டினார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டமான பிரெஞ்ச் ஓபனில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் சாம்பியனாகும் எதிர்பார்ப்பிலுள்ள நடால், இதுவரை 12 தடவைகள் பிரெஞ்ச் ஓபனை வெற்றிகொண்டுள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் உலகக் கிண்ண அந்தஸ்த்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் இருப்பதுடன் நடால் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராகத் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.