கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபனில் 13 ஆவது தடவையாக ஸ்பெய்னின் ரபேல் நடால் சாம்பியனாக மகுடம் சூடினார். இதற்கான இறுதிப் போட்டியில் அவர் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
ஓராண்டில் நடத்தப்படும் நான்கு முக்கியத்துவம் வாய்ந்த கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்குவந்தது. இதில் ஆடவர் ஒற்றைய பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான நொவெக் ஜோகோவிச் இராண்டாம் நிலை வீரரான ரபேல் நடாலை எதிர்கொண்டார்.
போட்டி மிகுந்த விறுவிறுப்பாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கு நடால் இடமளிக்கவில்லை. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர் 6-0, 6-2, 7-5 எனும் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.