
இலங்கை சிரேஷ்ட வீரர்கள் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவிருந்த கண்காட்சி டி-20 போட்டியை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைக்கு மத்தியில் வீரர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு நிதி திரட்டும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.