
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ் டோனியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து டோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி இருவரும் ராஞ்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனிடையே, இருவரது உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், அவர்களது உடலில் ஒக்சிஜன் அளவு சரியான அளவில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் முன்னாள் தலைவரான டோனி தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக விளையாடி வருகின்றார்.
இதேவேளை, இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,023 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.