February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜா கரியபெரும நியமனம்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜா கரியபெருமவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால முகாமையாளராக கரியபெரும நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா உறுதிப்படுத்தினார்.

தற்போதைய மகளிர் கிரிக்கெட் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் கரியபெரும, பங்களாதேஷ் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியில் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி முகாமையாளர் பதவிக்கு ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு நிரந்தர முகாமையாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார்” என்று பேராசிரியர் டி சில்வா டெய்லி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.