
கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபனை வென்ற வயது குறைந்த வீராங்கனையாக போலந்தின் இகா ஸ்வியாடெக் வரலாறு படைத்தார்.
19 வயதுடைய அவர் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனினை வெற்றிகொண்டார்.
ரோலண்ட் காரோஸில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் மற்றும் சோபியா கெனின் ஆகியோர் விளையாடினர்.
போட்டியில் 6-1,6-2 எனும் நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இளம் வீராங்கனையாகப் பதிவானார்.
இத்தொடரின் ஆரம்பத்தில் பிரான்ஸில் நிலவும் அதிக குளிரான காலநிலையால் தன்னால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த வெற்றி மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக தற்போது தெரிவித்துள்ளார்.
இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.