January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அனிமேஷன் தொடர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி அனிமேஷன் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கிரிக்கெட் மட்டுமல்லாது தனது பிற ஆர்வங்களையும் இந்த தொடர் உயிர்ப்பிக்கும் என நினைப்பதாகவும், இதன் கதை அருமையாக உள்ளது எனவும் தோனி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கப்டன்-7 என பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடரை, தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை தாண்டிய, அவரது விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கிய கதையாக, இந்த தொடர் இருக்கும் என நம்பப்படுகிறது.

கப்டன் 7 அனிமேஷன் தொடர் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஒரு கிரிக்கெட்டராக ,ஒரு கிரிக்கெட் அணியின் தலைவராக தோனியை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை மாறுபட்ட தோற்றத்தில் ,வித்தியாசமான கரக்டரில் அனிமேஷன் வெப் தொடரில் காண இருக்கிறார்கள்.

நீண்ட காலமாக கிரிக்கெட் மைதானங்களிலேயே பார்த்து வந்த தோனியை, தற்போது வெப்சீரிஸ் மூலமாகவும் ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.