
இலங்கை கிரிக்கெட் சபைக்கு 6 பேர் கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகள், பிரதான பயிற்றுவிப்பாளர், தேசிய விளையாட்டு சபை அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையே ஜனவரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க தலைமையில் இந்தத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இத் தெரிவுக்குழுவில் ரொமேஷ் களுவிதாரன, ஹேமந்த விக்ரமரத்ன, வீ.வராகொட, எஸ்.எச்.யு.கார்னைன் மற்றும் டி.என் குணரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.